25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


புதிய மின்னணு குடும்ப அட்டைகளை முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்  அவர்கள்  மற்றும்   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  அவர்கள்  பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புதிய மின்னணு குடும்ப அட்டைகளை முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள்  பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்  மற்றும்   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I  A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்   3,428 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை (28.07.2026) வழங்கினார்கள்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசின் திட்டங்களை திட்டங்களாக மட்டும் இருந்து விடாமல், மக்களின் கைகளில் அதன் பயன்களை கொண்டு சேர்க்கும் வகையில் செயலாற்றி வருகிறார்கள்.தமிழக முதல்வர் அவர்கள் கடந்த 13.07.2026 அன்று பெரம்பூர் தொகுதியில் புதிய குடும்ப அட்டைகள்  வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 73,000- க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 16.12.2025 முதல் 30.04.2026 வரை புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பம் செய்த நபர்களில் தகுதியான 3,991 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது.

இது போன்று பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களின் பயன்களும் பொதுமக்களை சென்றடையும் வகையில் மாவட்டத்தில் மக்கள் பணியை தொடர்ந்து செயலாற்றுவோம் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்  தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின்  அடிப்படை தேவைகளையும், கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில்  புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து காத்திருந்த பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் மாவட்டம் முழுவதும் வழங்கிட 3,992 குடும்ப அட்டைகள் பெறப்பட்டுள்ளன.  

முதற்கட்டமாக இராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 554 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 352 பயனாளிகளுக்கும், காரியாபட்டி வட்டாரத்தில் 360 பயனாளிகளுக்கும், சாத்தூர் வட்டாரத்தில் 289 பயனாளிகளுக்கும், சிவகாசி வட்டாரத்தில் 934 பயனாளிகளுக்கும்,, திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 360 பயனாளிகளுக்கும், திருச்சுழி வட்டாரத்தில் 187 பயனாளிகளுக்கும், வத்திராயிருப்பு வட்டாரத்தில் 324 பயனாளிகளுக்கும், வெம்பக்கோட்டை  வட்டாரத்தில் 291 பயனாளிகளுக்கும், விருதுநகர் வட்டாரத்தில் 340 பயனாளிகளுக்கும் என மொத்தம் 3,437  பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, குடிமைப்பொருள் உள்ளிட்ட  அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு  அத்தியாவசியமான ஒன்றாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் வரும் காலங்களில் தொடர்ச்சியாக நிறைவேற்றித்தரும். மகளிர்களுக்கான ரூ.2,500/- உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்திலுள்ள அமைச்சர்களாகிய நாங்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்  மற்றும்   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி மாவட்ட  வழங்கல் அலுவலர் திரு. அமர்நாத்,  வட்டார வழங்கல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் , பொதுமக்கள் உட்பட பலர்கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News