25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்  அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  அவர்கள் ஆகியோர் வெடி விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு காசோலைகளை வழங்கினார்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் வெடி விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு காசோலைகளை வழங்கினார்கள்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டியில் கடந்த 26.07.2026 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக தலா ரூ.4.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.16 இலட்சத்திற்கான காசோலைகளை (28.07.2026) வழங்கினார்கள்.

அதன்படி, இந்த வெடி விபத்தில் உயிரிழந்த சிவகாசி வட்டம் செங்கமலப்பட்டியைச் சேர்ந்த திரு.ராம்பிரகாஷ் என்பவரது வாரிசுதாரரான திருமதி பூமாரி என்பவருக்கும், திரு.இன்னாசிமுத்து என்பவரது வாரிசுதாரரான திருமதி ஜெயலட்சுமி என்பவருக்கும், திரு.ராமச்சந்திரன் என்பவரது வாரிசுதாரரான திருமதி லட்சுமி என்பவருக்கும், சிவகாசி வட்டம் நாரணாபுரத்தைச்  சேர்ந்த திரு.பாண்டித்துரை என்பவரது வாரிசுதாரரான திருமதி தமிழரசி என்பவருக்கும் என மொத்தம் 4 நபர்களுக்கு தலா ரூ.4 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.16 இலட்சம் மதிப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ,ஆருதலையும் தெரிவித்தனர்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் திருமதி மோகனா, அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News