குதிரைவாலி அரிசி வெஜ் பிரியாணி.
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி -500 கிராம், பச்சைபட்டாணி -50 கிராம், கேரட், பீன்ஸ் -50 கிராம், நெய் -50 கிராம், மீல்மேக்கர் எண்ணெய் -50 கிராம், முந்திரிப்பருப்பு -10, இஞ்சி-பூண்டு விழுது -3 மேஜைக்கரண்டி, மஞ்சள்தூள் -1 ஸ்பூன், கறிமசாலா -2 ஸ்பூன், பெரிய வெங்காயம் -1, தக்காளி -2, பச்சை மிளகாய் -5, வர மிளகாய் -3, புதினா, கொத்தமல்லி தழை -1 கைப்பிடி, உப்பு தேவையான அளவு
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரிப்பருப்பு, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து லேசாக வதக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், புதினா தழை மற்றும் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதில் கறிமசாலாதூள், மஞ்சத்தூள் சேர்த்து1/4 லிட்டர் தண்ணீர் ஊற்றி5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்றாக கொதித்ததும், குதிரைவாலி அரிசியை சேர்த்து கிளறி மூடி வைத்து மிதமான தீயில் வேக விடவும்.
அரிசி நன்றாக வெந்ததும் அடுப்பை அனைத்து, மேலே மேலே கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும். இதனுடன் கத்திரிக்காய் பச்சடி அல்லது வெங்காய பச்சடியுடன் சேர்த்து பறிமாறினால் சுவையாக இருக்கும்.
சாதாரண அரிசிக்கு மாற்றாக, சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசியில் செய்யப்படும் இந்த வெஜ் பிரியாணி சுவைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க சிறந்த தேர்வாகும்.
0
Leave a Reply