பத்திரப்பதிவு அலுவலக வரைவு வழிகாட்டி மதிப்பீட்டில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்.
விருதுநகர், செப்டம்பர் 23: பத்திரப்பதிவு அலுவலக வரைவு வழிகாட்டி மதிப்பு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக மனை மற்றும் விளைநிலங்களின் வழிகாட்டி மதிப்பில் உள்ள முரண்பாடுகளை களைந்திடும் வகையில் வரைவு வழிகாட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், அதனை 15 நாள்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ”மதிப்பீட்டு துணைக்குழுவிடம்,” மதிப்பீட்டு துணைக்குழு. மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), மாவட்டப் பதிவாளர் அலுவலகம், விருதுநகர் பதிவு மாவட்டம்" என்ற முகவரிக்கு அஞ்சலிலோ அல்லது நேரிலோ சந்தித்து தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply