சுப்மன்கில், பாண்ட்யா தேர்வு, இந்திய 'டி-20' அணி அறிவித்தது.
ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்பங்கேற்க,இந்தியாவந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, முதல் போட்டி வரும் டிச. 9ல் கட்டாக்கில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் நியூ சண்டிகர் (டிச. 11), தரம்சாலா (டிச. 14), லக்னோ (டிச.17), ஆமதாபாத்தில் (டிச. 19) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டன் சுப்மன்கில் 26, 'ஆல்-ரவுண் டர்' ஹர்திக் பாண்ட்யா 32, இடம் பெற்றுள்ளனர். சமீபத்திய கோல் கட்டாடெஸ்டில் கழுத்து பகுதியில் காயமடைந்த, சுப்மன் கில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள்தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வரும் இவர், 'டி-20' அணிக்கு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட போதும், காயத்தின் தன்மையைபொறுத்து 'லெவன்' அணியில் இடம் பெறுவார்.
0
Leave a Reply