25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி13 வது சீசனில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை  வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி13 வது சீசனில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை  வென்றது.

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப் பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. முதல் முறையாக நடந்த இந்த சாதனையைஇந்திய ரசிகர்கள் கொண்டாடினர். 

13-வது சீசன் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், மும்பை புறநகரான நவி மும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று  நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதினர் .

  திட்ட மிட்டநேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. மழையால் 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரை இறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர்.இந்திய அணி 50 ஓவர்களில் ,7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. 

இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள்,  வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக உலக கோப்பையை வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News