25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் (26.10.2025 முதல் 01.11.2025 வரை) கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் (26.10.2025 முதல் 01.11.2025 வரை) கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் (26.10.2025 முதல் 01.11.2025 வரை) கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் தலைமையில் (27.10.2025) அனைத்துத்துறை அலுவலர்களும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.அதன்படி, நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்.

          நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே நான், அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என்ற உறுதி மொழியினை அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.காளிமுத்து உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News