25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பிரதமர் மோடி 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதமர் மோடி "2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராகி வருகிறது," என தெரிவித்தார்.

72வது சீனியர் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் நேற்றுஉ.பி.,யின் வாரணாசியில் துவங்கியது. 58 அணிகளை சேர்ந்த ஆயிரம் வீரர், வீராங்கனைகள்,நாடு முழுவதும் இருந்து பங்கேற்கின்றனர். இத்தொடரை, பிரதமர் மோடி டில்லியில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.

 ஒலிம்பிக் பதக்க இலக்கு' திட்டத்தால், நாட்டின் விளையாட்டு கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  நம் இளம் நட்சத்திரங்கள் சர்வதேச போட்டிகளில்ஜொலிக்க ,வலுவான உட்கட்டமைப்பு, நிதி உதவி போன்றவை உதவியுள்ளது. இந்தியாவில், கடந்த 10 ஆண்டு களில், 'பிபா' 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து, உலக கோப்பை ஹாக்கி, பெரிய செஸ் தொடர்கள் உட்பட 20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. 

"கேலோ இந்தியா' விளை யாட்டு மூலம் நுாற்றுக்க ணக்கான இளைஞர்கள் தேசிய அளவிலான போட் டிகளில் பங்கேற்கின்றனர். வரும் 2030ல் இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு நடக்க உள்ளது. 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். 'மெகா' விளையாட்டுகளை நடத்துவதால், நமது வீரர், வீராங்கனைகளுக்கு அதிகளவில் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறதுஎன பிரதமர் மோடி தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News