ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப்தொடரில் இந்திய அணி தங்கம் வென்றது.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் டில்லியில் பெண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரி வில், ஈஷா சிங், மனு பாகர், சுருச்சி அடங்கிய இந்திய அணி, 1726.53 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றது.
இந்தியாவின் ராணா சாம்ராட், ஷர்வன் குமார், வருண் தோமர் அடங்கிய இந்திய அணி, ஆண்களுக்கான 10 மீ., 'ஏர்பிஸ்டல்' பிரிவில் 1732.52 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றனர்.
'தனி நபர் பிரிவு 10மீ., 'ஏர் பிஸ்டல்' பைனலில் இந்தியாவின் ராணா சாம்ராட், 220.3 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார். இந்தியவீரர் ஷர்வன் குமார் (198.6) 4வது இடம் பிடித்தார்.
0
Leave a Reply