25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


இந்திய வீராங்கனை சவிதா ஹாக்கி உலக கோப்பைக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் கூறினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வீராங்கனை சவிதா ஹாக்கி உலக கோப்பைக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் கூறினார்.

கடந்த2025ல் இந்திய ஹாக்கி அணி, சிறப்பாக செயல் படவில்லை. புரோ லீக் தொடரில்16 போட்டியில்10 புள்ளி மட்டும் பெற்று, வெளியேறியது. உலக கோப்பைக்கு(வரும் ஆக.14,30, பெல்ஜியம், நெதர்லாந்து) நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.ஐதராபாத்தில் நடக்க உள்ள உலக கோப்பை தகுதிச்சுற்றில்,புதிய பயிற்சியாளர் மரிஜ்னே தலைமையில்(மார்ச்8,14) பங்கேற்க உள்ளது.இதில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட  8 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் உலக கோப்பை தொடருக்கு 'டாப்-3' இடம் பெறும் அணிகள் முன்னேறும்.  

விளையாட்டில் ஏற்ற, இறக்கம் சகஜம் தான். கடந்த ஆண்டு எங்களுக்கு மோசமாக அமைந்தது. வீராங்கனைகளிடம் போதிய உடற்தகுதி ('பிட்னஸ்') இல்லாதது தான் முக்கிய காரணம். 'பிட்னஸ்' சரியாக இருந்ததால் தான், டோக்கியோ ஒலிம்பிக்கில் 4வது இடம் பெற்றோம்.மீண்டும் தற்போது சறுக்கி விட்டோம். உலக கோப்பை தகுதிச்சுற்று மிக முக்கியம் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். இதில் வெற்றி பெற்று, உலக கோப்பைக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தவிர அடுத்து வரும் ஆசிய விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம் என்று கோல்கீப்பர் சவிதா 35, கூறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News