இந்தியாவின் தான்வி சர்மா பாட்மின்டன் காலிறுதிக்கு முன்னேறினார்.
'சூப்பர் 100' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர்அசாமின் கவுகாத்தியில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா, தாய்லாந்தின் பாசா பன்னாசெட் மோதினர். இதில் தான்வி 21-17, 23-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத் 16-21, 21-16, 21-19 என, சகவீரர் பிரனாய் ஷெட்டிகரை ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் வென்றார். துஷார் சுவீர் 21–17, 18-21, 21-15 இந்தோனேஷியாவின் பிஸ்மோ ராயாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் தருண் 21-13, 21-16 என, சகவீரர் மெய்ரபா லுவாங் மைஸ்னமை தோற்கடித்தார்.
0
Leave a Reply