இந்தியாவின் மீனாட்சி, விஸ்வநாத் சுரேஷ் ஆகியோர் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ஆசியகுத்துச்சண்டை பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் அரை இறுதியில் இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா 4-1 - என்ற கணக்கில் தாய்லாந்தின் திப்சாட்சா யோத்வாரியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்தவிஸ்வநாத் சுரேஷ் ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் ,5-0 என்ற கணக்கில் ஹூதைபா எஷிசை (ஜோர் டான்) வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
. இந்தியாவை சேர்ந்த 6 வீராங்கனைகள், 2 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
0
Leave a Reply