இந்தியாவின் சிந்து இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதிக்கு முன்னேறி, பாட்மின்டன் சர்வதேச ஒற்றையர் பிரிவில் 500வது வெற்றியை பதிவு செய்தார்.
'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் இந்தோனேஷியாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் மோதினர்.சிந்து 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இது, பாட்மின்டன் சர்வதேச ஒற்றையர் பிரிவில் சிந்து பெற்ற 500வது வெற்றி.இதுவரை 732 போட்டியில், 500 வெற்றி, 232 தோல்வியை பெற்றுள்ளார். 6வது சர்வதேச நட்சத்திரமான முதல் இந்தியர் ஆனார்.
0
Leave a Reply