25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்தியாவின் துளசிமதி  முருகேசன் பாரா பாட்மின்டனில் மூன்று தங்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் துளசிமதி  முருகேசன் பாரா பாட்மின்டனில் மூன்று தங்கம் வென்றார்.

சர்வதேச பாரா பாட் மின்டன் தொடர் எகிப்தின் கெய்ரோவில் ,பெண்கள் ஒற்றையர் (எஸ்.யு 5) பிரிவு பைனலில் இந்தியாவின்  தமிழகத்தை  சேர்ந்த, துளசிமதி முருகேசன் 23,போர்ச்சுகலின் பியாட்ரிசை எதிர் கொண்டார்.

துளசிமதி, 21-8, 21-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார். * பெண்கள் இரட்டையரில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் துளசிமதி, மானசி ஜோடி, பைனலில் 21-8, 21-10 என இந்தியாவின் துலிகா, பியாட்ரிஸ் (போர்ச்சுகல்) ஜோடியை, வென்றுதங்கம் கைப்பற்றியது.

 இந்தியாவின் துளசிமதி, நிதிஷ் குமார் ஜோடி, கலப்பு இரட்டையர் பைனலில் 21-15, 21-8 என்ற நேர் செட்டில், இந்தியாவின் ருத்திக், மானசி ஜோடியை சந்தித்து, தங்கம் வென்றது. 

இந்தியாவின் பிரமோத் பஹத், ஆண்கள் ஒற்றையர் பைனலில் 19-21, 21-15-21-13 என்ற செட் கணக்கில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற சக வீரர் உமேஷ் விக்ரம் குமாரை வென்று, தங்கம் கைப்பற்றினார். இந்தியா இத்தொடரில் 8 தங்கம், 9 வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News