ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில் துபாயில் உள்ள இந்திய வீராங்கனை சிந்து பங்கேற்பது சந்தேகம்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர்பர்மிங்காமில் இன்று பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து பங்கேற்க இருந்தார். சனிக்கிழமை முதல் துபாயில் சிக்கியுள்ள சிந்து, விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் பர்மிங்காம் செல்வதில் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, தற்போது துபாயில் உள்ள சிந்து விமான போக்குவரத்து மூடப்பட்டதால் , இத்தொடரில் விளையாட வாய்ப்பில்லை.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி ஆண்கள்ஒற்றையரில் களமிறங்குகின்றனர். இதில் லக்சயா, முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' சீனாவின் ஷி யூ கியை சந்திக்கிறார். ஆயுஷ் ஷெட்டி, இந்தோனேஷியாவின் ஆல்வி பர்ஹானை எதிர் கொள்கிறார்.
0
Leave a Reply