25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >>


சர்வதேச பாரா பாட்மின்டன்: தமிழக வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ ‘தங்கம்’ வென்று சாதனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச பாரா பாட்மின்டன்: தமிழக வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ ‘தங்கம்’ வென்று சாதனை

அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில், தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

ஒற்றையர் பிரிவில் அசத்தல்

துளசிமதிக்கு தங்கம்: பெண்கள் ஒற்றையர் எஸ்.யு.5 (SU5) பிரிவின் இறுதிப்போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி சக இந்திய வீராங்கனையான மனிஷாவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய துளசிமதி 21-12, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

நித்யஸ்ரீக்கு தங்கம்: இதேபோல் பெண்கள் ஒற்றையர் எஸ்.எச்.6 (SH6) பிரிவின் இறுதிப்போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீ 21-12, 21-12 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் ஆலிவியாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

இரட்டையர் பிரிவில் பதக்கங்கள்

வெள்ளிப் பதக்கம்: பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் துளசிமதி - மானஷி ஜோடி 14–21, 21-13, 17-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஆக்டிலா - சாடியா ஜோடியிடம் போராடித் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றது.

வெண்கலப் பதக்கம்: கலப்பு இரட்டையர் பிரிவில் துளசிமதி - நிதேஷ் குமார் ஜோடி வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தியது.

இந்தத் தொடரில் ஒற்றை ஆளாக தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று துளசிமதி சாதனை படைத்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News