சர்க்கரைவள்ளி கிழங்கு வடை.
சர்க்கரைவள்ளி கிழங்கு வடை
தேவையான பொருட்கள் -
சர்க்கரைவள்ளி கிழங்கு (வேகவைத்து மசித்தது) - 1 கப்,
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1,
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது),
இஞ்சி (துருவியது) - சிறிய துண்டு,
கடலை மாவு அல்லது அரிசி மாவு - 2 முதல் 3 ஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
சோம்பு - அரை ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை -
ஒரு அகலமான பாத்திரத்தில் வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளி
கிழங்கை எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு
மற்றும் உப்பு சேர்க்கவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
மாவு பதம் வர கடலை மாவு அல்லது அரிசி மாவு சேர்த்துப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த கலந்தைக் சிறிய
வடைகளாகத் தட்டிப் போடவும்.
மிதமான தீயில் வைத்து, இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும்
வரை பொரித்து எடுக்கவும்.
0
Leave a Reply