25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


சர்வதேச யோகா தினம்  நிகழ்ச்சி -2026 மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச யோகா தினம்  நிகழ்ச்சி -2026 மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை,  சார்பில்(21.06.2026) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தொடங்கி வைத்தார்.யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல அது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்கும் ஒரு சிறந்த வாழ்க்கை முறையாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலக மக்களுக்கு நல்வாழ்வை அளித்து வரும் யோகா, இன்று உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு அரிய கலையாக திகழ்கிறது.

 இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மன அழுத்தம், உடல் சோர்வு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழலில், யோகா உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிகாட்டுகிறது.யோகா என்பது ஏதோ நேற்று உருவான கலை அல்ல. இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது சித்தர்களாலும், முனிவர்களாலும் கண்டறியப்பட்டு, வளர்க்கப்பட்ட ஒரு வாழ்வியல் அறிவியல் (Science of Living).

 இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினக் கருப்பொருளான “ஆரோக்கியமான முதுகெலும்பிற்கான யோகா” என்பது மிகவும் பொருத்தமானதாகும். நமது உடலின் முக்கிய ஆதாரமாக இருக்கும் முதுகெலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பதுடன், மன அமைதியும் கிடைக்கிறது.

 இன்றைய இளைய தலைமுறையினர், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், தொழில்நுட்ப உலகில் மூழ்கி, போதிய உடற்பயிற்சியின்றி 'மன அழுத்தம்' (Stress) மற்றும் 'பதற்றம்' (Anxiety) போன்ற சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் யோகாசனத்தை ஒரு பாடமாகவோ அல்லது தினசரி பயிற்சியாகவோ கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம். யோகா செய்யும் ஒரு மாணவனின் கவனம் (Focus) கூடுகிறது, நினைவாற்றல் (Memory power) அதிகரிக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் நிதானம் கிடைக்கிறது.

 அதேபோல், நீரிழிவு நோய் (Diabetes), ரத்த அழுத்தம் (BP), இதயம் சார்ந்த கோளாறுகள் போன்ற வாழ்வியல் நோய்களுக்கு (Lifestyle diseases) மருந்து மாத்திரைகளைத் தாண்டி யோகா ஒரு சிறந்த இயற்கை நிவாரணியாகச் செயல்படுகிறதுஎனவே, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவரும் தினமும் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வரை யோகா பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடல்நலத்தை மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை, கவனத்திறன் மற்றும் செயல்திறனையும் மேம்படுத்தும்.

 யோகாவை ஒரு நாள் நிகழ்வாக மட்டும் கருதாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒவ்வொருவரும் யோகா பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.இந்த யோகா தின விழாவில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்வில் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News