25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


( ஐ. பி. எல் ) இந்தியன் பிரிமியர் லீக் 'டி - 20' தொடர் இன்று ஆரம்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

( ஐ. பி. எல் ) இந்தியன் பிரிமியர் லீக் 'டி - 20' தொடர் இன்று ஆரம்பம்.

பெங்களூரு, சின்ன சாமி மைதானத்தில் இந்தியன்பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடரின் 19வது சீசன் இன்றுதுவங்குகிறது. மே 31ல் பைனல் நடக்கஉள்ளது.சென்னை, கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இன்று முதல் லீக்போட்டியில் பெங்களூரு அணி, ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

இம்முறை லீக் சுற்றில்ஐ.பி.எல்., தொடரில் 70 போட்டிகள் ,அடுத்து 'பிளே ஆப்' சுற்றில் 4 என மொத்தம் 65 நாளில், 74 போட்டிகள் நடக்க உள்ளன.சென்னையில் சேப்பாக்கம், மும்பை வான்கடே, கொல்கட்டா ஈடன் கார்டன் உட்பட 13 மைதானங்களில் போட்டிகள் நடக்கும்.

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் 'ஏ', 'பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், மற்ற அணிகளுடன் தலா 1 முறை (4 போட்டி) மோதும். அடுத்த பிரிவில் உள்ள 5 அணிகளுடன் தலா இருமுறை மோதும் (10 போட்டி). ஒவ்வொரு அணியும் தலா 14 போட் டியில் பங்கேற்கும்.

புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் தகுதிச்சுற்று 1ல் மோதும். வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும். 3, 4 வது இடம் பிடிக்கும் அணி கள் 'எலிமினேட்டர்' 'போட்டியில் மோதும். வெல்லும் அணி தகுதிச் சுற்று 2க்கு முன்னேறும்.தோற்கும் அணி வெளியேறும்.

தகுதிச்சுற்று 1ல் தோற்ற, 'எலிமினேட்டர்' போட்டியில் வென்ற அணிகள் தகுதிச்சுற்று 2ல் மோதும். வெல்லும் அணி பைனலுக்கு செல்லும். தோற்கும் அணிக்கு 3வது இடம் கிடைக்கும்.

தகுதிச்சுற்று 1, 2ல் வென்ற அணிகள் மே 31 ல், நடக்கவுள்ள பைனலில்  மோதும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News