25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ராஜபாளையம் பழையபஸ் ஸ்டாண்ட் பணிகள்  முடித்துள்ள நிலையில் அமைச்சரின் தேதிக்காக  திறப்பு விழா காத்திருக்கிறதா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் பழையபஸ் ஸ்டாண்ட் பணிகள்  முடித்துள்ள நிலையில் அமைச்சரின் தேதிக்காக  திறப்பு விழா காத்திருக்கிறதா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ராஜபாளையம் நகர் நடுவே செயல்பட்ட பழைய பஸ் ஸ்டாண்ட் த் கட்டடம் சேதமடைந் ததால் நகர்ப்புற மேம் பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.90 கோடிக்கு 2023 ஜன. மாதம் பணிகள் துவங்கியது.இதனால் கிராமங்களுக்கு சென்று வரும், பஸ்கள் மகப்பேறு மருத்துவமனை முன்பிருந்து தற்காலிகமாக இயக்கப் பட்டு வருகிறது. பழைய கட்டடம் இடிக்கப்பட்டு இரண்டு ஓட்டல்கள், புறக் காவல் நிலையம், சுகாதார வளாகம், 27 வணிக கடை கள் கட்டப்பட்டுள்ளது.

சட்டசபை தொடரில் எம். எல். ஏ., தங்கபாண்டியன் பஸ் ஸ்டாண்ட் திறப்பிற்கு அமைச்சரின் வருகை தேதி ,கிடைக் காததால் பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா தள்ளிப் போகிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது . பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளை கடந்து பணிகள் முடிந்துள்ள நிலையில் செயல் பாட்டிற்கு வராததால் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

பஸ் ஸ்டாண்ட் முன்பு தினமும் காத்திருக்கும் ஆயிரக்க ணக்கான பயணிகளுக்கு இருக்கை, கழிப்பறை, மழை வெயிலிலிருந்து ஒதுங்க வசதி இல்லை. எனவே பயணிகள் நலன் கருதி முடிவடைந்துள்ள, பழைய பஸ் ஸ்டாண்டை விரைந்து திறக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News