25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


போக்குவரத்துத் துறையில் வாகன உரிமையாளர்கள் ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண் விபரத்தினை இணைப்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

போக்குவரத்துத் துறையில் வாகன உரிமையாளர்கள் ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண் விபரத்தினை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

அனைத்து வாகனங்களுக்கும் வாகன விபரங்களுடன் வாகன உரிமையாளர்களின் கைபேசி எண்ணை வாகனப் பதிவுச் சான்றுடன் இணைப்பது போக்குவரத்துத் துறையில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. எனவே, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன விபரத்துடன் தங்களது கைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதா என்ற விபரத்தினை போக்குவரத்துத்துறை இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளவும், தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்டுள்ள கைபேசி எண்ணை தங்களது பெயரில் உள்ள வாகனங்களுடன் இணைக்கவும் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

        விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களை அணுகி, வாகன உரிமையாளர்கள் தங்களது ஆதார் நகலுடன் ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண் விபரத்தினை கொடுத்து வாகன எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News