பலா விதை துவையல்.
தேவையான பொருட்கள்:
பலா விதை -250 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
பச்சை மிளகாய்-2
பெருங்காயம்,
தேங்காய், உப்பு, புளி, தண்ணீர் தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் சூடானதும் தோல் நீக்கிய பலாவிதைகளை போட்டு நன்கு வறுக்கவும். பின், காய்ந்த மிளகாய், பெருங்காயம், துண்டாக்கிய பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
இந்த கலவை ஆறியதும் உப்பு, புளி, துருவிய தேங்காய், தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
வித்தியாசமான சுவையுள்ள, 'பலா விதை துவையல்!' தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சத்துகள் நிறைந்தது.
0
Leave a Reply