கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: இந்திய வீராங்கனைகள் வெற்றி.
தென் கொரியாவில் நடைபெற்று வரும் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான தொடக்கத்தை பதிவு செய்தனர்.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் தான்வி சர்மா, சீனாவின் ஆன் கி யுவானை 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப், ஹாங்காங்கின் சின் யான் ஹேப்பி லோவை 16-21, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.
மேலும் இந்தியாவின் ஸ்ரீயான்ஷியும் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறினார்.
0
Leave a Reply