தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு- தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருமதி பா ஆனந்தி அவர்கள் தகவல்.
சென்னை, தொழிலாளர் ஆணையர் திரு.சி.அ ராமன், I A S. அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் பொதுத்தேர்தல் வருகின்ற 23.04.2026 அன்றும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக 23.04.2026 நாளன்றும் இரண்டாம் கட்டமாக 29.04.2026 நாளன்றும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் மற்றும் விதி 135B-ன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரையின்படி தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு, வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு வங்காளத்தில் 23.04.2026 மற்றும் 29.04.2026 ஆகிய தேதிகளில் பொதுத் தேர்தல் நடைபெறுவதாலும், மேற்கு வங்காளத்திலிருந்து வந்து தமிழகத்தில் பணிபுரியும் அம்மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக மேற்படி தினங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தேர்தல் தினமான 23.04.2026 மற்றும் 29.04.2026 ஆகிய தினங்களில் மேற்படி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தொழிலாளர்கள் புகார்களை தெரிவிப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் தலைமையில் அவரது ஆட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொழிலாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது தொடர்பான புகார்களை 04562-252130, 94453 98763, 91594 43377, 98653 90006 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருமதி பா ஆனந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply