25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தாவரங்களின் ஒளி பகிர்மானம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாவரங்களின் ஒளி பகிர்மானம்.

தாவரங்களின் வளர்ச்சிக்கு ஒளி மிகவும் முக்கியம். சூரிய ஒளியிலிருந்து தான் அவை உணவைத் தயாரிக்கின் றன. ஒரு சிறிய செடி யின் அருகில் பெரிய மரமோ பிற தாவரமோ இருந்தால், செடிக்குப் போதுமான ஒளி கிடைக்காது. அப்போது அதுஒளியை நோக்கி நகரும். சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இது தொடர்பான சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. விஞ்ஞானிகள் குழு, சூரிய காந்திப் பூக்கள் வளர்கின்ற முறையை ஆய்வு செய்தனர். நெருக்கமாக வளரும்போது ஒரு செடியின் நிழல் மற்றொன்றின் மீது விழும். இதைச் சூரியகாந்திச் செடிகள் புரிந்து கொள்கின்றன். தங்கள் மீதும் விழுவது தாவரத்தின் நிழலா, கட்டடங்களின் நிழலா என்பதைக் கூட அவற்றால் வேறுபடுத்திக் காண முடியும்.

கட்டட நிழல் தங்களைப் பெரியளவில் பாதிக்காது என்பதும் அவற்றுக்குத் தெரிந்துள் ளது. அதே நேரத்தில் தாவரத்தின் நிழல் பட் டால் வேறு திசைகளில் வளர்கிறது.ஒரு மேடையில் கூட்டமாக ஆடுபவர்கள் எப்படி ஒருவரை ஒருவர் மறைக்காதபடி வரிசைப்படுத்திக் கொள்கிறார்களோ அதுபோல்  சூரியகாந்திப் பூக்கள் கூட்டமாக வளரும் போது ஒன்றை ஒன்று மறைத்துக் கொள்ளாமல்  சூரிய ஒளி அனைத்து செடிகளுக்கும் கிடைக்கும்படி வளர்கின்றன இதனால் ஒரு குறிபிட்ட இடத்தில் வளரும் அனைத்துச் செடிகளும் பயன்பெறுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News