மத்திய பிரதேசத்தின் வீராங்கனை நீரு தண்டா தேசிய துப்பாக்கி சுடுதல் 'டிராப்' பிரிவில், தங்கம் வென்றார்.
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம் பியன்ஷிப் டில்லியில், பெண்களுக்கான 'டிராப்' பிரிவு தகுதிச் சுற்றில் மத்திய பிரதேசத்தின் பிரகதிதுபே (117), நீருதண்டா (114) முதலிரண்டு இடம் பிடித்தனர்.
நீரு தண்டா அடுத்து நடந்த பைனலில், 41 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து, தங்கத்தை வென்றார். கஜகஸ்தானில் சமீபத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றிருந்தார்.
பிரகதி துபே, நீரு தண்டா, மணிஷா கீர் அடங்கிய ,மத்திய பிரதேச அணி, பெண்கள் அணிகளுக்கான 'டிராப்' பிரிவில், 339 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே டில்லி, பஞ்சாப் அணிகள் தட்டிச் சென்றன.
டில்லி (323 புள்ளி), தமிழகம் (295), ராஜஸ்தான் (274) ஜூனியர் பெண்கள் அணிகளுக்கான 'டிராப்' பிரிவில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்..
0
Leave a Reply