25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


மகாசிவராத்திரி வழிபாடு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மகாசிவராத்திரி வழிபாடு .

 பிரம்மா மற்றும் விஷ்ணு இடையே 'யார்  பெரியவர்'  என்ற போட்டி வந்தபோது சிவன்.  ஜோதி பிழம்பாக அவர்கள் முன் தோன்றினார். 

அந்த நெருப்புத் தூணின் அடிமற்றும் முடியைக் காண முடியாத நாளே மகாசிவராத்திரி.

இது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி (அமாவாசைக்கு முந்தைய நாள்) அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நான்கு காலமும் விழித்திருக்க முடியாதவர் மூன்றாம் காலம் பார்வதிதேவி சிவனை வழிபாடும் நேரம் (15.2.26 இரவு 12 மணி முதல் 12.30 வரை விழித்திருக்கலாம்.)

(15-02-2020) விரதம் துவங்கும் நாள் அன்று முழுவதும் உபவாசம் இருக்கலாம், (அல்லது) பால், பழம் மட்டும் உண்ணலாம்.

விரதம் நிறைவு செய்யும் நாள்& நேரம் (16-02-2026) காலை 04:00 மணிக்குள்  உங்கள் வேண்டுதலை சிவனிடம் வேண்டிக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

சிவன் வழிபாடோடு குலதெய்வத்தை வழிபாடு செய்வது குலதெய்வத்தின் அருள் பெற வழிவகுக்கும்.

சிவராத்திரி, சிவன்-பார்வதி திருமணம் நிச்சயமான நாள், 

தேவர்கள் தங்கம், வெள்ளி, முத்துகளை பரிசாக கொண்டு வந்தார்கள்.

ஆனால்,துறவியான சிவபெருமானிடம் செல்வம் இல்லை. இருப்பினும், பார்வதிக்கு ஒரு சிறப்பு பரிசு கொடுக்க வேண்டும் என்ற ஆசை.அவர் தானே பச்சை லாக் வளையல்கள் செய்து, வேஷம் பூண்டு இமயமலையில் சென்று, அதை பார்வதியின் கைக்கு அணிவித்தார்.அந்த நிமிஷத்திலேயே பார்வதி அவரை அடையாளம் கண்டார்.

அப்போது சிவன் சொன்னார். 'இந்த பச்சை வளையல்கள்  சௌபாக்கியத்துக்கும், படைப்பின் சக்திக்கும் அடையாளம்.‘ஆகவே ,சிவராத்திரியில் பச்சை வளையல் அணிவது, பார்வதிக்கு சிவன் அளித்த முதல் பரிசை நினைவுபடுத்துவது.சிவராத்திரியில்  பச்சை வளையல்கள் அணிய வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News