.மைதா பர்பி.
தேவையான பொருட்கள்:
1/2 கப் மைதா,
,1/2 கப் சர்க்கரை ,
1/2 கப் வனஸ்பதி (அ) நெய்,
1/2 ஸ்பூன் ஏலக்காய்.
செய்முறை :
சர்க்கரையை பொடிக்கவும்.தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, கடாயில்வனஸ்பதி சேர்க்கவும்.
வனஸ்பதி உருகி எண்ணெய், போல மாறிய பின் மாவை சேர்த்து, சிறிய தீயில் வைத்து கிளறவும்.
மாவை சேர்த்து நன்கு கலந்து ,பின்பு இறக்கி அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
பின்னர் சர்க்கரைப் பொடி சேர்த்து நன்கு கலந்து ஆறவிடவும்.
வெது வெதுப்பான சூட்டில் காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி, 20 நிமிடம் குளிர்சாதனப் பெட்டியில்
வைக்கவும்.
20 நிமிடத்துக்கு பின்பு வெளியில் எடுத்து 10 நிமிடம் அறை வெப்பநிலையில் விட்டு ,பின்தேவையான வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்.
தொண்ணூறுகளில் மிகவும் பிரபலமான, குழந்தைகளின் விருப்பமானதாக இது இன்றும் உள்ளது...
0
Leave a Reply