மாலை முரசு' அதிபர் மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று துவக்கம்.
இந்தியா உள்பட 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் மாலைமுரசு' அதிபர் மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ்போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகின்றன.இதில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது, ஐரோப்பா ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த, 14 வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.
இரட்டையர் பிரிவின் இறுதி போட்டி ஜனவரி 17ம் தேதி மாலை 4:00 மணிக்கும், ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி 18ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கும் நடைபெறும்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைமைச் செயல் அதிகாரி ஹிடென் ஜோஷி இந்தத் தொடரின் இயக்குநராக உள்ளார். இந்த போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை 27 லட்சம் ரூபாய். போட்டிகளை பொது மக்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.
0
Leave a Reply