25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


மருத்துவம் நிறைந்த மணக்கும் மகிழம்பூ;
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மருத்துவம் நிறைந்த மணக்கும் மகிழம்பூ;

வீடு மற்றும் கோயில்களில் நறுமண்த்திற்காக வளர்க்கப்படும் மகிழம்பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

மகிழம்பூ மற்றும் மகிழம்பூ விதைகளின் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதது. இதன் அறிவியல் பெயர் மிமுசோப்ஸ் இலாங்கி (Mimusops Elengi) மகிழம்பூவிலிருந்து வாசனைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், பசியின்மை முதல் மன அழுத்தம் வரை அனைத்து பிரச்சனைகளையும் குணமாக்கும்.

மகிழ மரத்தின் பிஞ்சுகளை இரண்டு எடுத்து வாயில் மென்று அவற்றை துப்பிவிட்டு வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

மகிழம் பூவை காயவைத்து பொடி செய்து அதனை மூக்கில் உறிஞ்சினால் தலையில் கோர்த்து கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலைபாரம் நீங்கும்.

மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை, மாலை அருந்தி வர காய்ச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோள் பட்டை வலி போகும்.

மகிழம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்து தலைக்கு தடவி வந்தால், உங்களுக்கு பொடுகு, பேன் தொல்லை இருக்காது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News