25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்   தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்   தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்  தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (15.03.2026) திறந்து வைத்து பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாவட்ட  தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை  அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பிரத்தியேகமாக 24 X 7 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்வதற்கான கட்டணமில்லா எண்: 1800 425 2166  மற்றும்  தொலைபேசி எண்: 04562 -294067, 04562 -294068, 04562-294069, 04562 -294070 ஆகும்.

எனவே, பொதுமக்கள் விருதுநகர் மாவட்டத்தில் தேர்த்ல் நடத்தை விதிமீறல்கள்(வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குதல், பணம் பதுக்கி வைத்தல் போன்ற விதிமீறல்கள்) ஏதுமிருப்பின் மேற்படி கட்டணமில்லா எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.மேலும், தகவல் தெரிவிக்கும் நபர் பற்றிய விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S ., உட்பட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News