25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் அரசு மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த 40 தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகங்களை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் அரசு மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த 40 தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகங்களை வழங்கினார்.

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (26.06.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த 40 தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

 தமிழ்நாடு அரசால் தாய் மற்றும் சேய் நலனைப் பேணும் வகையில் ”தாய் சேய் நல பெட்டகம்” வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் இப்பெட்டகம், பச்சிளங் குழந்தைகளின் ஆரம்பகால ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 அந்த வகையில் பச்சிளங் குழந்தை மற்றும் தாயின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பெட்டகத்தில் குழந்தைக்கான ஆடைகள் மற்றும் துண்டு, படுக்கை மற்றும் கொசுவலை, பராமரிப்புப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், தாய்க்கான குளியல் சோப்பு மற்றும் தாய்-சேய் சுகாதாரக் கையேடு உள்ளிட்டவை அடங்கிய சுமார் 16 வகையான பொருட்கள் வழங்கப்படுகின்றன.

 அதன்படி, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று(26.06.2026) அரசு மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த 40 தாய்மார்களுக்கு தலா ரூ.1600/- மதிப்புள்ள தாய் சேய் நல பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News