டேவிஸ் கோப்பை: இந்திய அணியில் மனாஸ் தம்னே.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் மனாஸ் தம்னே முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென் கொரியாவின் சியோல் நகரில் வரும் செப். 18, 19 ஆகிய தேதிகளில் டேவிஸ் கோப்பை பைனலுக்கான தகுதிச்சுற்றின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 362வது இடத்தில் உள்ள மனாஸ் தம்னே முதல்முறையாக இடம் பிடித்துள்ளார்.
மற்ற இந்திய வீரர்களான சுமித் நாகல் (235வது இடம்), தக்ஷினேஸ்வர் சுரேஷ் (393வது இடம்) ஆகியோர் ஒற்றையர் பிரிவில் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி (28வது இடம்), ஸ்ரீராம் பாலாஜி (57வது இடம்) ஜோடி மீண்டும் களமிறங்குகிறது.
0
Leave a Reply