25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விருதுநகர் மண்டலத்தில் 10 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மண்டலத்தில் 10 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 10 நகர்  பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்  (21.11.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திடவும், பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திடவும், போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகளை ஒதுக்கீடு செய்யவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக தற்போது 9 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக தற்போது 10 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விருதுநகர் - ஒண்டிப்புலி வழித்தடம், விருதுநகர் – பேரையூர் வழித்தடம், சாத்தூர் - நாருகாபுரம் வழித்தடம், சாத்தூர் - திருத்தங்கல் வழித்தடம், அருப்புக்கோட்டை - உடையநாதபுரம் வழித்தடம், அருப்புக்கோட்டை – பி.தொட்டியான்குளம்  வழித்தடம், திருவில்லிபுத்தூர் – இராஜபாளையம் - திருவில்லிபுத்தூர் - சிவகாசி வழித்தடம், இராஜபாளையம் – திருவில்லிபுத்தூர் – கான்சாபுரம்  வழித்தடம், இராஜபாளையம் – திருவேங்கடம் - இராஜபாளையம் – மாங்குடி வழித்தடம், காரியாபட்டி – திருவளநல்லூர் – காரியாபட்டி - அருப்புக்கோட்டை வழித்தடம் ஆகிய 10 வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளின் சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

  இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மண்டல பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்) திரு.கோபாலகிருஷ்ணன், துணை இயக்குநர்(போக்குவரத்து கழகம்) திரு.தங்கவேலு, விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், உதவி மேலாளர்(வணிகம்) திரு.நாகராஜ், உதவி பொறியாளர் திரு.தமிழ்செல்வன், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துக்கழக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News