தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர் பார்க்கின்றனர்.
திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி முழுமை அடையும் நிலையை எட்டியுள்ளது. பலஇடங்களில் மேம்பால பணிகள் மட்டுமே முடிவடைய வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ்ஸ்டாண்ட் வரையுள்ள நான்கு வழிச்சாலையில் பல கனரகவாகனங்கள், கார்கள், இளைஞர்களும் பைக் ரேஸில், அதி வேகத்தில் வந்து விபத்தில் சிக்கும் நிலை கடந்த சிலநாட்களாக ஏற்பட துவங்கியுள்ளது. ஒருகார் கவிழ்ந்து நான்கு பேர் காயமடைந்தனர்.டூவீலரில் சென்ற எஸ்.ஐ. ஒருவர் தவறிவிழுந்து பலியானார்.வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கிருஷ்ணன் கோவிலுக்குள் செல்லாமல் நான்கு வழிச்சாலையிலேயே பயணிக்கின்றன. இவர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சர்வீஸ் ரோட்டில் இறங்கும் போது வேகத்தை கட்டுப் படுத்தாமல் விபத்து ஏற்படுகிறது.விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர் பார்க்கின்றனர்.
0
Leave a Reply