25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


பலகாரங்கள் - சில டிப்ஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பலகாரங்கள் - சில டிப்ஸ்

குலாப் ஜாமுனை எண்ணெய்யில் பொரிக்கும்போது சிறிது கருகி விட்டாலும் ஜாமும் இருகி, சுவை மாறிவிடும். இதற்கு ஜாமுனை சர்க்கரை பாகுடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து சூடு செய்து இறக்கினால் போதும் ஜாமும் மிருதுவாக இருக்கும்.

அதிரசம் செய்யும்போது அதிரச மாவுடன் பேரிச்சம் பழத் துண்டுகள் சேர்த்து, பிசைந்து அதிரசம் செய்தால் புது சுவையுடன் இருக்கும் குழந்தைகள் விரும்பி உண்பர்.

சிலருக்கு சீடை செய்யும்போது வெடித்து விடும். அதற்காகவே சீடைச் செய்வதை கைவிட்டு இருப்பார்கள். இனி சீடை செய்யும் போது, மாவினை சீடையாக உருட்டிய பிறகு, ஊசியால் சிறு துளையிட்ட பின் எண்ணெய்யில் பொரித்தால் வெடிக்காது.

பலகாரத்தில் அதிக எண்ணெய்த் தன்மை இருந்தால் இரண்டு நாட்களுக்குமேல் பயன்படுத்த முடியாது. எனவே எண்ணெய் பலகாரங்கள் செய்ய ஆரம்பிக்கும் போதே, எண்ணெய்யில் சிறு துண்டு புளியைப் போட்டு பின், பலகாரங்களைப் பொரித்து எடுத்தால் பலகாரங்கள் எண்ணெய் உறியாமல் இருக்கும்.

இந்த தீபாவளிக்கு சிறு தானியங்கள் தான் டிரெண்ட் உங்கள் வீட்டில் எந்தச் சிறுதானிய பலகாரம் செய்தாலும் மாவுடன், சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால், பலகாரம் ருசியாக இருக்கும்

முறுக்கு வெள்ளையாக ருசியாக மொறுமொறுன்னு இருக்க டிப்ஸ்

பச்சரியை கழுவி வெயிலில் காய வைக்காமல் நிழலில் ஒரு துணியில் காய வைக்க வேண்டும். உளுந்தை சிவக்கவோ பழுப்பாகவோ வறுக்கக்கூடாது. வாணலி சூடு ஆனவுடன் உளுந்தை போட்டு வாசம் வரும்

வரை அடுப்பை சிம்மில் வைத்து வறுக்க வேண்டும். உளுந்தில் கறுப்பு உளுந்து, சிவந்த உளுந்தை பொறுக்கி எடுத்து விட வேண்டும்.முக்கால் பங்கு சூடு ஆறியவுடன் காய்ந்த அரிசியுடன் ஒன்றாக உளுந்தை கொட்டி வைக்கலாம்.மிஷினில் அரைக்கும் முன் 1/2 பச்சரிசி கொடுத்து அரைத்தபின் முறுக்கு மாவு அரைக்க வேண்டும். மிஷினில் வேற மாவு கலந்தால் முறுக்கு மாவு பிணையும் போது கலர் மாறும். மாவு பிணையும் போது தேங்காய் பால் சேர்த்துபிணைய முறுக்கு வெள்ளையாகவும் வாசனையுடனும் மாறுமொறு வென்று இருக்கும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News