25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விருதுநகர் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக மாவட்ட அளவில் 15 சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக மாவட்ட அளவில் 15 சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை, விருதுநகர் மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக 2025-2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 15 கலைஞர்கள் விருதுகள் வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவ்விருதுகளை தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக 2021-2022 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கிட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

2025-2026 ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கலை விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S. அவர்கள் தலைமையில் 10.07.2026 அன்று நடைபெற்ற தெரிவுக்குழு கூட்டத்தில், திருநெல்வேலி, மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர், திரு.து.சிவப்புகழ் அவர்கள், விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.நாகராஜபூபதி அவர்கள், விருதுநகர் மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.நா.அன்பரசு அவர்கள், கலை சுடர்மணி திருமதி.வ.லலிதா, பரதநாட்டியக் கலைஞர், கலை வளர்மணி திரு.ரவிச்சந்திரன், நாதஸ்வரக் கலைஞர், கலை முதுமணி திரு.கோ.ஆறுமுகம், நாடகக் கலைஞர் மற்றும் கலை வளர்மணி.செல்வி.உமாராணி, கிராமியக் கலைஞர் ஆகியோர் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களை, அகவை மற்றும் கலைப்புலமை அடிப்படையில்  கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

2025-2026 ஆம் ஆண்டு மாவட்ட கலை விருதுகளில் கலை இளமணி விருதுகளுக்கு செல்வி பா.காவ்யஸ்ரீ(பரதநாட்டியம்), செல்வி செ.ஸ்ரீநிதி (பரதநாட்டியம்), செல்வி.மு.வேதசாதனா(ஓவியம்), கலை வளர்மணி விருதுகளுக்கு திரு.இர.சுரேஷ்குமார்(நாடகம்), திரு.பொ.விஸ்வநாத்(கரகாட்டம்),  திரு.பெ.சிவக்குமார்(நாட்டுப்புறப் பாடல்),கலை சுடர்மணி விருதுகளுக்கு திரு.வே.சுடலைக்கனி(தவில்), திரு.கா.கருப்பசாமி(ஒயிலாட்டம்), திரு.த.தனலெட்சுமி(வில்லிசை பாடகர்), கலை நன்மணி விருதுகளுக்கு திரு.அ.கந்தவேல்(நாதஸ்வரம்), திரு.ப.மாரிராஜ்(வாய்பாட்டு), திரு.பா.வெங்கடேஸ்வரன்(சிலம்பம்), கலை முதுமணி விருதுகளுக்கு திருமதி இளவரசி சொக்கர்(ஓவியம்), திரு.எஸ்.கே.கோபால்(நாதஸ்வரம்), திரு.பே.காளியப்பன்(நாடகம்) ஆகிய 15 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு, விருதுநகர் மாவட்டத்தில் 19.07.2026 அன்று அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ள ஓவிய சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நிறைவு விழாவில் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News