25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


நவராத்திரி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நவராத்திரி .

காளையர்க்கு ஓரிரவு  சிவராத்திரி அல்லது வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசி.ஆனால்  கன்னியர்க்கு ஒன்பது  நாள் நவராத்திரி.

நவராத்திரி என்றால் "ஒன்பது இரவுகள்" என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது.

 சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும்.

ஆஷாட நவராத்திரி, ஆனி, ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.

புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும். 

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு .

புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் முதல் வரும் நவராத்திரியே மிகப் பிரதானமாக  எல்லோரும் கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியு டன் நிறைவுபெறுகிறது

எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் கம்பன் என்பவனுக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.

இவன் பிரம்மனை குறித்து  பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது, என்றும் அப்படி நேர்ந்தால் அது ஒரு பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.இதன்பின் அவன் தேவர்களைத் துன்புறுத்தத் துவங்கினான். அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். சக்தி தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார்.

தேவர்கள்மகிழ்ந்தனர்.மகிசாசூரனிடம்போராடிப்போர்செய்துதேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிசாசுரவர்த்தினி” என்று சக்தியைப் போற்றினார்கள்.ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது.

.இந்த ஆண்டு நவராத்திரி விரதமானது வருகின்ற September  22  முதல்  October 1 வரை நடைபெறவுள்ளது.நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் (மாலை 6 முதல் 9 மணி வரை) பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு, பெண்கள் மாலை மற்றும் இரவில் நவராத்திரியை வழிபடுவார்கள்

 நவராத்திரியானது இந்து மக்களால் எந்த நாட்டில் இருந்தாலும் கொண்டாடப்படும் ஒரு விரத முறை எனலாம்.

நவராத்திரி விரதங்களும் பல வகைகளைக் கொண்டுள்ளன. இந்த ஒன்பது நாட்களிலும் சிலர் தண்ணீர் மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள், சிலர் பழங்களை சாப்பிடுகிறார்கள், சிலர் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடுகிறார்கள்.

நவராத்திரி விரதத்தின் போது கோதுமை மற்றும் அரிசி போன்ற வழக்கமான தானியங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கிச்சடி, உப்புமா,  தோக்லாஸ் (குஜராத்தி) அல்லது பாயசம் (கீர்) தயாரிப்பதில் அரிசிக்கு பதிலாக சாமை அல்லது தினை, ஜவ்வரிசி (சாபுதானா) உபயோகப் படுதா படுகிறது பயன்படுத்தப்படலாம்.

நவராத்திரி விரதத்தின் போது அனைத்து வகையான பழங்களையும் சாப்பிடலாம். சிலர்  இந்த ஒன்பது நாட்களும் பழங்கள் மற்றும் பால் மட்டுமே உண்டு விரதம் இருப்பார்கள்.

நவராத்திரி விரதத்தின் போது, பெரும்பாலான மக்கள் காய்கறிகள் - உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி இனிப்பு உருளைக்கிழங்கு, சூரன் கிழங்கு, பூசணி, கீரை, தக்காளி, வெள்ளரி, கேரட் போன்றவற்றை உட்கொள்கிறார்கள்.

நவராத்திரி விரதத்தின் போதுபால்மற்றும்பால்பொருட்கள், உட்கொள்ளப்படுகின்றன.

வெங்காயம் அல்லது பூண்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். அசைவ உணவுகள், முட்டை, மது, புகைபிடித்தல் ஆகியவையும் உட்கொள்ளக் கூடாது

நவராத்திரியின் தனிச்சிறப்பே இது முழுக்க முழுக்க பெண்களுக்கான பண்டிகையாகும்.

அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்

இந்த நவராத்திரி பண்டிகை புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது.

முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.

நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன.

துர்க்கை: மகேசுவரி, கெளமாரி , வாராகி.

இலட்சுமி: மாகா லெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி.

சரஸ்வதி : சரஸ்வதி, நாரசிம்மி , சாமுண்டி.

நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார அம்ச தேவதைகளாகவும் கொண்டாடுகிறோம்.

சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுதபூஜையாகவும் கொண்டாடுகின்றனர்.

நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் கொண்டாடுகிறோம்

ஒன்பது நாட்கள் மகிசாசுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே விஜயதசமி – வெற்றியின்  திரு நாள்

குழந்தைகள் கல்வியினை கற்க இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி முதல் தினம் தொடங்கி  ஒன்பது நாட்கள்  முழுவதும் காலையில் நீராடி சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்குப் பூச்சூடி, கற்பூரம், பழம் இதனுடன் நெய்வேத்தியம் வைத்து தெய்வங்களுக்குரிய மந்திரங்களைக் கூறி வணங்க வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News