25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


இண்ட்ராக்ட் கிளப் ஆஃப்  ஆனந்தா வித்யாலயாவின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் பதவி ஏற்கும்  நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இண்ட்ராக்ட் கிளப் ஆஃப்  ஆனந்தா வித்யாலயாவின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் பதவி ஏற்கும்  நிகழ்ச்சி

ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியின் சார்பாக இண்ட்ராக்ட் கிளப் ஆஃப்  ஆனந்தா வித்யாலயாவின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் பதவி ஏற்கும்  நிகழ்ச்சி பள்ளித் தாளாளர் ஸ்ரீமதி. ஆனந்தி அவர்கள் முன்னிலையில்  சிறப்பாக  நடைபெற்றது. 

சிறப்பு விருந்தினராக Rtn.PAG.S.M.யூசுப் ராஜா அவர்கள் கலந்து கொண்டார். Rtn. வியாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்க, பள்ளித் தாளாளர் விருந்தினர் களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் இண்ட்ராக்ட் கிளப் தலைவராக மாணவி. R.A. தாமரைச்செல்வி மற்றும் செயலாளராக மாணவி V.K.சனந்தா பதவி ஏற்றுக் கொண்டனர்.

பள்ளி முதல்வர் திரு.S. கோபாலகிருஷ்ணன் தலைவர்  மற்றும் செயலாளரை அறிமுகம் செய்ய  யூத் சர்வீஸ் சேர்மன் Rtn. வெங்கடபெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். 

சிறப்பு விருந்தினர் தமது உரையில் தலைமைப் பண்பை எவ்விதம் வெளிக்கொணர்வது  என்பது பற்றிப் பேசினார்.  மாற்றம் மாணவர்களிடமிருந்து தொடங்க வேண்டும் என்றும், சிலிகான் வேலியில் பணிபுரியும் தகவல் தொடர்பு  நிறுவனங்களில் தென் தமிழகத்தின் பங்கு அதிக அளவில் இருப்பதை எடுத்துரைத்தார்.

ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் திரு. காளிதாஸ் நன்றியுரை கூற  தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. விழாவில் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News