'தாய் கிழவி' 'அறிவு' திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வு.
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் வெளியான'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 'இந்தியன் பனோரமா 2026' பிரிவுக்குத் இப்படம் தேர்வாகியுள்ளது.
இதேபோல்,'கழுகு' பட இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் விஜயகுமார், ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள'அறிவு' திரைப்படமும் இப்பிரிவுக்குத் தேர்வாகியுள்ளது.பெண்களின் உரிமைகள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 11-ம் தேதி வெளியாகிறது.
0
Leave a Reply