டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வெரேவ்.
இத்தாலியின் டுரின் நகரில் ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றனர்.
ஜான் மெக்கன்ரோ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டனை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஸ்வெரேவ் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஏற்கனவே தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினின் ரபேல் ஜோடாரை வீழ்த்தியிருந்த ஸ்வெரேவ், தொடர்ந்து 2-வது வெற்றியைப் பதிவு செய்தார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
0
Leave a Reply