மொத்த வணிகர்கள், சில்லறை வணிகர்கள், பெரிய தொடர் சில்லறை விற்பனை நிறுவனங்கள், ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் பதனப்படுத்துவோர் ஆகியோர் வைத்திருக்கக்கூடிய கையிருப்புக்கு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு நெல் / அரிசி, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்யவும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைத்திடவும் கள்ளச் சந்தையில் பதுக்குவதைத் தடுக்கவும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 - பிரிவு 3 இன் கீழ் கையிருப்பு வரம்பு கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்த ஆணைகள் 13.11.2026 அன்று தமிழ்நாடு அரசிதழில் சிறப்பு வெளியீடாக பிரசுரிக்கப்பட்டுள்ளன.அதன்படி மொத்த வணிகர்கள், சில்லறை வணிகர்கள், பெரிய தொடர் சில்லறை விற்பனை நிறுவனங்கள், ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் பதனப்படுத்துவோர் ஆகியோர் வைத்திருக்கக்கூடிய கையிருப்புக்கு பின்வருமாறு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மொத்த வணிகர்கள் (13.11.2026 முதல் 12.02.2027 வரை) துவரம்பருப்பு 200 மெ.டன்னும், (13.11.2026 முதல் 12.02.2027 வரை) உளுந்தம்பருப்பு 200 மெ.டன்னும், (31.01.2027 வரை) நெல்/அரிசி 2,000 மெ.டன்னும், (15.10.2026 முதல் 14.01.2027 வரை) சர்க்கரை முகவருக்கு ஒரு நேரத்தில் மொத்தம் 1000 குவிண்டால் அளவு சரக்கு பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு மிகுதியாக வைத்திருத்தல் கூடாது.சில்லறை வணிகர்கள் (13.11.2026 முதல் 12.02.2027 வரை) துவரம்பருப்பு 5 மெ.டன்னும், (13.11.2026 முதல் 12.02.2027 வரை) உளுந்தம்பருப்பு 5 மெ.டன்னும், (31.01.2027 வரை) நெல்/அரிசி 8 மெ.டன்னும், (15.10.2026 முதல் 14.01.2027 வரை) சர்க்கரை முகவருக்கு ஒரு நேரத்தில் மொத்தம் 1000 குவிண்டால் அளவு சரக்கு பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு மிகுதியாக வைத்திருத்தல் கூடாது.
பெரிய தொடர் சில்லறை விற்பனை நிறுவனங்கள் (13.11.2026 முதல் 12.02.2027 வரை) துவரம்பருப்பு ஒரு விற்பனை நிலையத்திற்கு 5 மெ.டன்னும், ஒரு கிடங்கிற்கு 200 மெ.டன்னும், (13.11.2026 முதல் 12.02.2027 வரை) உளுந்தம்பருப்பு ஒரு விற்பனை நிலையத்திற்கு 5 மெ.டன்னும், ஒரு கிடங்கிற்கு 200 மெ.டன்னும், (31.01.2027 வரை) நெல்/அரிசி ஒரு சில்லறை விற்பனை அலகிற்கு 8 மெ.டன்னும், (15.10.2026 முதல் 14.01.2027 வரை) சர்க்கரை முகவருக்கு ஒரு நேரத்தில் மொத்தம் 1000 குவிண்டால் அளவு சரக்கு பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு மிகுதியாக வைத்திருத்தல் கூடாது.ஆலை உரிமையாளர்கள் துவரம்பருப்பு கடந்த 3 மாத உற்பத்தி அளவு அல்லது ஆண்டு உற்பத்தித் திறனில் 25% இவற்றில் எது அதிகமோ அது, (13.11.2026 முதல் 12.02.2027 வரை) உளுத்தம்பருப்பு கடந்த 3 மாத உற்பத்தி அளவு அல்லது ஆண்டு உற்பத்தித் திறனில் 25% இவற்றில் எது அதிகமோ அது, (31.01.2027 வரை) நெல்/அரிசி ஒரு மாத கால உற்பத்தித்திறன் அளவிற்குள் வைத்திருக்க வேண்டும்.
இறக்குமதியாளர்கள் (13.11.2026 முதல் 12.02.2027 வரை) துவரம்பருப்பு, (13.11.2026 முதல் 12.02.2027 வரை) உளுத்தம்பருப்பு, (31.01.2027 வரை) நெல்/அரிசியினையும் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் நாளிலிருந்து 45 நாட்களுக்கு மேல் இருப்பு வைத்தல் கூடாது.பதனப்படுத்துவோர் (31.01.2027 வரை) நெல்/அரிசி மாதாந்திர உற்பத்தி திறனளவில் 60% வைத்திருக்கலாம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆணைகள் 16.11. 2026 முதல் அமலுக்கு வந்துள்ளன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வகையினர் உளுந்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பைப் fcainfoweb.nic.in/psp என்ற தளத்திலும், நெல் / அரிசி மற்றும் சர்க்கரை ஆகியவற்றைப் foodstock.dfpd.gov.in என்ற தளத்திலும் 16.11.2026 முதல் வரம்புக்குள் உள்ள இருப்பு அளவினைப் பதிவு செய்தல் வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு அதிகமாக இருப்பு வைத்தல், இருப்பு விபரத்தினை முறைப்படி அறிவிப்பு செய்யத் தவறுதல், தவறான தகவல் கொடுத்தல், அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கையிருப்பு வைத்தல், இருப்பினை மறைத்தல் அல்லது பிரித்து பதுக்கி வைத்தல் ஆகியன சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை என கருதப்படும்.16. 11. 2026 முதல் நிர்ணயிக்கப்பட்ட கையிருப்பு வரம்புகளை மீறுபவர்கள் மற்றும் பிற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 இன் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்தகைய பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் மாவட்ட வழங்கல் அலுவலர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர், துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டக் குழு மேலே குறிப்பிடப்பட்ட தலங்களை மாவட்டம் முழுவதும் கூட்டுத்தணிக்கை செய்யும்.இவ்வாணைகள் விவசாயிகள் தங்களது சொந்த வேளாண் விளை பொருட்களை இருப்பு வைத்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
தமிழ்நாடு அரசின் ஆணைகளை முழுமையாகக் கடைபிடித்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நியாயமான விலையில் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்திட வணிகர்கள், ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள், பதனப்படுத்துவோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply