25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில்,மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை  அமைச்சர்  அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில்,மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில், (11.03.2026) நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் வழங்கும் விழாவில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் 1071 பயனாளிகளுக்கு ரூ.17.80 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று சுய சார்புடன் தமது சொந்தகாலில் நிற்க வேண்டும் எண்ணத்துடன் அவர்களை ஆற்றல்படுத்திடவும் அதிகாரப்படுத்திடவும், மகளிர் வாழ்வில் உள்ள வறுமை என்னும் இருளை நீக்கி வளம் என்னும் ஒளியை பரவச் செய்வதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசால் மகளிர் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட அமைப்பே தமழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகும். ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களை செய்திடும் நோக்கத்துடன் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனமானது மகளிர் திட்டம் என்ற சீரிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது

விருதுநகர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் 450 ஊராட்சிகளில் 10,347 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. நகர்புறப் பகுதிகளில் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் மொத்தம் 3,943 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டிற்கு (2025-26) விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.1007 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்க இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு நாளது தேதி வரை 8,948 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.922.38 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஊரக மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் தகுதிபெற்ற மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கிட ஏதுவாக வட்டார அளவில் தரமதிப்பீடு முகாம்கள் தொடர்ச்சியான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்றைய தினம் அருப்புக்கோட்டை நகர்ப்புற பகுதிகளில் உள்ள 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.31.48 இலட்சம் மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.54 இலட்சம் மதிப்பிலும், இராஜபாளையம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.56.8 இலட்சம் மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 22 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.58 கோடி மதிப்பிலும், சாத்தூர் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30.75 இலட்சம் மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 19 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலும், திருவில்லிபுத்தூர் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.54 இலட்சம் மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.39.66 இலட்சம் மதிப்பிலும், வெம்பக்கோட்டை ஊரகப் பகுதிகளில் உள்ள 14 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.56 கோடி மதிப்பிலும், வத்திராயிருப்பு நகர்ப்புற பகுதிகளில் உள்ள 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25.68 இலட்சம் மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலும் என மொத்தம் 99 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10.33 கோடி கடனுதவிகளும்

அமுத சுரபி நிதி 264 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.88 கோடி கடனுதவிகளும், வட்டார வணிக வள மையம் மூலம் 83 பயனாளிகளுக்கு ரூ.41.50 இலட்சமும், சமுதாய முதலீட்டு நிதி 115 குழுக்களுக்கு ரூ.1.39 கோடி கடனுதவிகளும், நலிவு குறைப்பு நிதி 469 பயனாளிகளுக்கு ரூ.1.54 கோடி கடனுதவிகளும், நுண் நிறுவன நிதி 41 பயனாளிகளுக்கு ரூ.24.30 இலட்சம் கடனுதவிகளும், ஆக மொத்தம் 1071 பயனாளிகளுக்கு ரூ.17.80 கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊரகம் மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் 54,325 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3787.46 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டு சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையச் செய்திட வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்களின் உரிமைக்காகவும், மேம்பாட்டிற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து தங்கள் ஆதரவு வழங்க வேண்டும் என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்   திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்  தெரிவித்தார்.தொடர்ந்து, சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கு 24 சான்றிதழ்களும், சமுதாய திறன் பள்ளி திட்டத்தின்கீழ் நிறைவு செய்த 160 இளைஞர்களுக்கு சான்றிதழ்களையும், 6 சுய உதவிக் குழுக்கள், ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் ஒரு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உள்ளிட்டவைகளுக்கு மணிமேகலை விருதுகளையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்   திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.சு.இலக்குவன், அருப்புக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திருமதி சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி வசுமதி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News