இந்திய போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் உள்ளூர் ஒருநாள் தொடரில் தமிழக அணி7 போட்டியில் 12 புள்ளியுடன் (3 வெற்றி, 4 தோல்வி), 5வது இடம் பிடித்தது.
இந்திய போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் உள்ளூர் ஒருநாள் தொடர், ஜெய்ப்பூரில் நடந்த ('சி') போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின.
பஞ்சாப் அணிக்கு அன்மோல்பிரீத் சிங் (57), ராமன்தீப் சிங் (72) கை கொடுத்தனர். 45.1 ஓவரில் 216 ரன் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய, மும்பை அணி 215 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் அணி 1 ரன்னில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
ஆமதாபாத்தில் நடந்த 'ஏ ' பிரிவு போட்டியில் தமிழகம், கேரளா மோதின. 50 ஓவரில் கேப்டன் ஜெகதீசன் (139) சதம் அடிக்க , தமிழக அணி 294/8 ரன் எடுத்தது.
கேரள அணி 40.2 ஓவரில் 217 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தமிழக அணி 77 ரன்னில் வென்றது. 7 போட்டியில் 12 புள்ளியுடன் (3 வெற்றி, 4 தோல்வி), 5வது இடம் பிடித்தது.
0
Leave a Reply