நெடுஞ்சாலைத்துறை சார்பில், மல்லாங்கிணர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில் (28.02.2026) நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ.39.95 கோடி மதிப்பில் மல்லாங்கிணர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் எண்ணற்ற சமுதாய முன்னேற்றத்திற்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம்.ஒரு சமுதாயம் என்றிருக்கின்ற போது அதில் பல்வேறு தரப்பு மக்கள் இருப்பார்கள். அதில் அடித்தட்டு நிலையில் உள்ள மக்களை கை தூக்கி விடுவது தான் ஒரு சிறந்த அரசாங்கத்திற்கு இலக்கணமாக இருக்க முடியும்.அதுவும் குறிப்பாக பெண்கள் நம்முடைய சமுதாயத்திலே மிக கவனமாக அவர்களுடைய உயர்வினை கையாள்வது ஒவ்வொரு அரசுக்கும் மிக மிக முக்கியம்.
பெண்கள் நலத்திட்டங்கள் என்றால் பொதுவான திட்டங்களை தாண்டி அவர்கள் பொருளாதாரத்திலேயே தற்சார்பை பெற வேண்டும், யார் கையையும் எதிர்பார்த்து இருக்க கூடிய சூழ்நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்கின்ற பல்வேறு திட்டங்களுக்கு மத்தியில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த மகத்தான திட்டம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம்.இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே ஒரு கோடி 31 இலட்சம் மகளிர்கள் இந்த திட்டத்தில் பயன் பெறுகிறார்கள்.ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்த முதலமைச்சர் அவர்கள், திடீரென்று இன்ப அதிர்ச்சியாக நம்முடைய மகளிர்களுக்கு ரூ.5000 முன்பணமாக வழங்கி உங்களை கௌரவப்படுத்தினார்கள்.சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த அளவிற்கு இந்த அரசு ஆர்வம் காட்டுகிறதோ, அதே போல ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதிலும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள்.அப்படி பல துறைகளை நாம் எடுத்துச் சொல்ல முடியும்.
மக்களுடைய அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு நம்முடைய இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மல்லாங்கிணறு பேரூராட்சியில் எண்ணற்ற திட்டங்களை நாம் நிறைவேற்றி இருக்கின்றோம். குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. மல்லாங்கிணர் பெரியகுளம் கண்மாய்க்கும், மல்லாங்கிணரை சுற்றி இருக்கக்கூடிய கிராமங்களில் நாம் இன்றைக்கு பாசன வசதிகளை கொண்டு வருவதற்காக சென்னம்பட்டியினுடைய வலது பிரதான கால்வாய் சீரமைக்கப்பட்டு ஏறத்தாழ 40 வருடங்களுக்குப் பிறகு தண்ணீர் கொண்டு வரக்கூடிய முயற்சியில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம்.அந்த வகையில் நம்முடைய நீண்ட கால கோரிக்கையாக இருந்த மல்லாங்கிணரில் இருந்து விருதுநகருக்கும் காரியாபட்டிக்கும் செல்லக்கூடிய சாலை ஒரு காலத்தில் இந்த சாலையை பார்த்தோம் என்று சொன்னால் மிகுந்த போக்குவரத்துக்கு சிரமமான சாலையாக இருந்தது.
கலைஞர் அவர்களுடைய தலைமையிலான ஆட்சி அமைந்த பொழுது தான், இந்த சாலையை 7 மீட்டர் சாலையாக அகலப்படுத்தினோம். இன்றைக்கு கலைஞருடைய மகன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சியில் தான் அந்த ஏழு மீட்டர் சாலை என்பது 10 மீட்டர் சாலையாக இன்னும் அகலப்படுத்தி அந்த பணிகள் நடைபெற்றுக் கூறிக் கொண்டிருக்கின்றது.காரணம் ஊர் வளர்ந்து கொண்டிருக்கின்றது. நம்முடைய கிழக்குப் பகுதியான காரியாபட்டி, மாவட்ட தலைநகராக இருக்கக்கூடிய விருதுநகரை இணைக்கக்கூடிய ஒரு கேந்திரமான சாலையில் அமைந்திருக்கக் கூடிய ஒரு பேரூராட்சி இது.வருங்கால போக்குவரத்தை நாம் கருத்தில் கொண்டு அதை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டபோது, முதலமைச்சர் அவர்களும், நெடுஞ்சாலை துறை அமைச்சர் அவர்களும் மிகுந்த அன்போடு ஏறத்தாழ 16 கிலோமீட்டர் இருக்கக்கூடிய அந்த சாலையை ஏறத்தாழ ரூபாய் 55 கோடி ஒதுக்கப்பட்டு அந்த பணிகள் நடந்து கொண்டிருப்பதை நாம் காண முடியும்.
மல்லாங்கிணர் ஊருக்குள் செல்லும் பொழுது காலையில் போக்குவரத்து நெரிசல் இருப்பதை நான் பார்க்கிறோம். இந்த வழியாக செல்லக்கூடிய கனரக வாகனமாக இருந்தாலும், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் காலை மாலை வேலைகளிலே போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இன்றைக்கு இப்படி இருந்தால் வரக்கூடிய காலங்களில் எப்படி ஊர் விரிவடைந்து கொண்டே போகின்ற பொழுது ஒரு புறவழிச் சாலை தேவை என்று நாம் நம்முடைய முதலமைச்சர் அவர்களிடம் கேட்டபோது அதற்கும் உடனடியாக ஆணைகளை வழங்கி, ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஏறத்தாழ ரூ.40 கோடி செலவில் இன்றைக்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.எனவே மல்லாங்கிணரை மையப்படுத்தி சாலை வசதிக்காக மட்டும் ஏறத்தாழ ரூ.100 கோடி வழங்கப்பட்டிருக்கிறது என்பது மிகவும் முக்கியம்.
நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி தொகுதி என்பது மாபெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது. குடிநீர் வழங்கும் பணிகளுக்கு ஏற்கனவே தாமிரபரணியில் இருக்கக்கூடிய தண்ணீரை தாண்டி ரூபாய் 75 கோடி செலவில் மல்லாங்கிணர் பேரூராட்சியில் இருக்கக்கூடிய கிராமங்களுக்கும், காரியாபட்டி பேரூராட்சியில் இருக்கக்கூடிய கிராமங்களுக்கும் புதிதாக குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.அந்த பணிகள் இப்பொழுது முழுமையாக முடிவடைந்து இருக்கிறது. வரக்கூடிய சில நாட்களில் வைகையில் இருந்து வரக்கூடிய தண்ணீரும் நம்முடைய பகுதி மக்களை வந்து அடைவதற்குரிய திட்டத்தினை நாம் இன்றைக்கு முழுமையாக மக்களுக்கு ஒப்படைக்க காத்திருக்கிறோம்.
குடிநீராக, சாலை, போக்குவரத்து அடிப்படை வசதிகளாக இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்திருக்கக் கூடிய ஒரு அரசாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய அரசு இருக்கிறது. இந்த திட்டங்களை எல்லாம் செய்வதற்கு அடிப்படை காரணம் ஒரே ஒருவர் நான் அவர் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கக்கூடிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்.எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றும் ஆதரவோடு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, மல்லாங்கிணர் பேரூராட்சி தலைவர் திரு.துளசிதாஸ், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply