25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விருதுநகர் மாவட்ட  விளையாட்டு அரங்க மைதானத்தில் குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையத்தினை, உரிய சந்தா கட்டணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விருதுநகர் மாவட்ட  விளையாட்டு அரங்க மைதானத்தில் குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையத்தினை, உரிய சந்தா கட்டணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

 தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையின்போது,  மாவட்ட விளையாட்டு வளாகங்களில் தற்போதுள்ள உடற்பயிற்சி கூடங்கள் ரூ.10 கோடி செலவில் குளிர்சாதன வசதிகளுடன் நவீனமயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனடிப்படையில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்த உடற்பயிற்சி கூடமானது தற்போது நவீனமயமாக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையமாக மாற்றி அமைக்கப்பட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 30.08.2025 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

  அனைத்து வயதினரின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்திடும் நோக்கத்துடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவதற்கு எதுவாக உறுப்பினர் சந்தா கட்டணம் ஒரு மாதத்திற்கு ரூ.944/மும், மூன்று மாதங்களுக்கு ரூ.2549/மும், ஆறு மாதங்களுக்கு ரூ.4248/- மும், ஒரு வருடத்திற்கு ரூ.6797/- மும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இந்த நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News