25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டுமாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் இரத்ததானம் முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டுமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இரத்ததானம் முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் இரத்ததானம் முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை (15.10.2026) வழங்கினார்.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் நாள் தேசிய தன்னார்வ இரத்ததான தினமாக கொண்டாடப்படுகிறது. மனித நேயத்திற்காக ஒரு துளி குருதியைக் கொடுத்து மனித உயிர்களை காப்பாற்றுவோம் என்பதனை மையக்கருப்பொருளாகக் கொண்டு இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழகம் இந்திய அளவில் குருதிக்கொடையில் 99% பங்களிப்புடன் முதலிடம் வகிக்கின்றது.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிவகாசி தலைமை மருத்துவமனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை, இராஜபாளையம் அரசு மருத்துவமனை ஆகியன இரத்த சேமிப்பு மையங்களாக செயல்பட்டு வருகிறது.கடந்த 2025-2026 ஆம் நிதியாண்டில் அரசு மருத்துவமனைகள் மூலமாக 4,709 யூனிட் இரத்தமும், 227 இரத்ததான முகாம்களின் வாயிலாக 14,354 யூனிட் இரத்தம் என 19,063 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் 227 இரத்ததான முகாமினை ஏற்பாடு செய்த 106 முகாம் அமைப்பாளர்கள், 19 இளம் இரத்தகொடையாளர்கள் என மொத்தம் 125 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முகாம் அமைப்பாளர்கள் குருதிக் கொடையாளர்களுக்கு வழிகாட்டியாவும், ஊக்கப்படுத்தியும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி செயல்பட்டு வருகின்றனர். இளம் கொடையாளர்கள் வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் செயல்படுவதனால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இரத்தகொடையாளர்களிடமிருந்து தானமாக பெறப்படும் இரத்தமானது பேறுகால சிகிச்சைகளுக்கும், விபத்தினால் ஏற்படும் இரத்த இழப்பினை ஈடுசெய்யவும், பல்வேறு வகையான அறுவை சிகிச்சைகளுக்கும் மற்றும் நோய் பாதிக்கப்பட்டவருக்கு இரத்த தட்டணுக்கள் வழங்கி உயிர் காக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஒருவரிடமிருந்து பெறப்படும் இரத்தமானது 4 உயிர்களை காப்பாற்ற உதவுகிறது. குருதிப் பகுப்பாய்வின் மூலம் இரத்தக்கூறுகள் பிரிக்கப்பட்டு பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும், பேறுகாலத்தின் போது தாய் மற்றும் சேய் இழப்பினை தடுக்கும் பொருட்டு அனைத்து மேம்படுத்தப்பட்ட மற்றும் வட்டார தலைமை மருத்துவமனைகளில் இரத்த சேமிப்பு மையங்கள் 12 இடங்களில் செயல்படுகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு கல்லூரியிலும் செயல்படும் செஞ்சுருள் சங்கத்தின் மூலம் இரத்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இ-ரக்டோஸ் (E-Raktkosh) இணையதளத்தில் தன்னார்வ இரத்ததான கொடையளர்களின் விவரங்களை பதிவு செய்து இந்திய நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தளம் என்ற கொள்கையை கொண்டு இரத்த வளங்களின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரா.அமுதாராணி, இணை இயக்குநர்(மருத்துவ நலப்பணிகள்) ஆ.காளிராஜ், மருத்துவமணை துணைக் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த்பாபு, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வைஷ்ணவி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் ஆனந்தீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News