25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்த இளம் தொழில் முனைவோர்களுக்கு ஒருநாள் புத்தொழில் பயிற்சி முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்த இளம் தொழில் முனைவோர்களுக்கு ஒருநாள் புத்தொழில் பயிற்சி முகாம்

விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் (28.02.2025) விருதுநகர் மண்டலத்தில் உள்ள அனைத்து புத்தாக்க தொழில் நிறுவனங்கள், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கான புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்த விருதுநகர் மாவட்ட நிர்வாகம, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN)  மற்றும் காமராஜ் பொறியில் கல்லூரி நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்த ஒருநாள் புத்தொழில் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ((StartupTN) என்பது அனைத்து புத்தாக்க தொழில் நிறுவனங்கள், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்துவதற்கு, உலக சந்தைக்கு தேவையான புதிய தொழில் முயற்சிகளுக்கு தகுந்த வழிகாட்டுதல் வழங்குதல், நிதி திரட்டுவதற்கான வழிமுறையை உருவாக்கி கொடுத்தல், தொழில் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல்,  தொடக்க நிலையில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் முனைவுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொள்ளும் வகையில் தொடங்கப்பட்டு, இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இன்று உலகம் முழுவதும் இருக்க கூடிய மாறி வரும் பொருளாதரார சூழலில் ஸ்டார்ட் அப் என்று சொல்லக்கூடிய புதிய தொழில் நிறுவனங்கள் உருவாவது என்பது முன்னெப்போதையும் விட பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. மனித நாகரிக வளர்ச்சி குறித்தும், நெருப்பு சக்கரம் மின்சாரம் இணையம் இந்த நான்கு கண்டுபிடிப்புகள் தான் மனித குல வரலாற்றில் நாகரிகத்தின் போக்கை மாற்றியது.
மனிதன் என்பவன் இந்த உலகத்தில் மிகச்சிறிய உயிரினம் தான். மனிதனை விட மிக வலிமையான உயிரினங்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன. இந்த உலகத்தில் உள்ள வளத்தில் மனிதன் மற்ற உயிரினங்களை விட ஏன் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறான் என்றால் அவன் கண்டுபிடித்த தொழில் நுட்பங்கள் மற்றும் மனிதனுக்கு இருக்கக்கூடிய பகுத்தறிவு சிந்தனைகள் தான். உலகத்தில் நீங்கள் எடுத்துக் கொண்டால் ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு மொத்த மனிதனுடைய தேவை என்பது ஒரு மாதிரி இருக்கும். அடுத்து வரக்கூடிய நூறு ஆண்டுகளில் மனிதனுடைய தேவை வேறு மாதிரி இருக்கும்.வருகிற காலக்கட்டத்தில், பெரிய தொழில்நுட்பங்கள், பகுத்தறிவு சிந்தனைகள் அவ்வப்போது மாறி கொண்டே இருக்கிறது.எனவே உலகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும், அனைத்து துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுவத்தற்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.இந்த மாற்றுத்திற்கு ஏற்ப தொழில்களும், வேலைவாய்ப்புகளும் மாறி கொண்டே இருக்கிறது.  

உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இளம் தொழிலாளர்கள் இன்றைக்கு புதிதாக ஒரு தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள்  அதிகமாக இருக்கிறது. புதிதாக தொழில் தொடங்குவதில் உள்ள பிரச்சனைகளுக்கான தீர்வு, நிதி வாய்ப்புகள், பயிற்சி இவற்றை ஏற்படுத்தி தருவதற்கு தான் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ((StartupTN)இன்று உலகத்தில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியதுதான் இந்த ஸ்டார்ட் அப். இன்று உலகத்தில் மக்கள் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை என்ன அதனால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நேர இழப்பு, ஆற்றல் இழப்பு, பொருளாதார இழப்பு மற்றும்  உழைப்பு விரயம் என்ன என்பதை ஆராய்ந்து இந்த மூன்றையும்  சேமிக்கக்கூடிய திறன் பெற்ற ஒரு தொழில் முனைவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் என்பது தொழில் தொடங்குவதற்கான ஒரு முன்னோடியான மாவட்டமாக இருந்து வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 100 வருடங்களுக்கு முன்னால் 1920 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தான் தொழில்கள் தொடங்கப்பட்டன. மூன்று தொழில்கள் பிரதானமாக இங்கு தொடங்கப்பட்டன. அவை இங்கு இருக்கக்கூடிய பட்டாசு, வர்த்தகம், மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதைத்தொடர்ந்து ஸ்பின்னிங் இண்டஸ்ட்ரீஸ், பேனாவின் உடைய நிப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் அச்சுத் தொழிற்சாலைகள் இதுபோன்ற தொழில்கள் ஒரு நூறு வருடத்திற்கு முன்னால் தான் தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் இது போன்ற தொழில்கள் எந்த மாதிரியான தொலைநோக்கு பார்வையுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு தொழில் நீடித்து நிலையாக வளர்வதற்கு என்னென்ன காரணிகள் உள்ளது என்பதை விருதுநகர் மாவட்டத்தின் வரலாற்றுத் தொன்மையையும், தொகுப்புகளையும் நீங்கள் படித்தீர்களேயானால் உங்களுக்கு ஆச்சரியமான தகவல்கள் நிறைய கிடைக்கும்.

இந்த நிகழ்வில், பல்வேறு தொழில்துறை மற்றும் Startup முன்னோடிகள் இணைந்து  மல்டி-செக்டர் தொழில்முனைவு வளர்ச்சி, தொழில்முனைவோருக்கு வழிகாட்டினர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.சரவண கணேஷ், மண்டல ஒருங்கிணைப்பாளர்( StartupTN) திரு.சக்திவேல், சோனி பயர் ஒர்க்ஸ் முனைவர் விக்னேஷ் , முன்னணி தொழில்முனைவோர்கள், காமராஜ் கல்லூரி நிர்வாகிகள் , கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News