25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் வெறும் 13% மட்டுமே.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் வெறும் 13% மட்டுமே.

உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் பயன்படுத்தும் நிறுவனங்களில், வெறும் 13% நிறுவனங்கள் மட்டுமே உண்மையான லாபத்தைப் பெறுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களில் 13% மட்டுமே அதன்மூலம் லாபம் ஈட்டுவதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

 58% நிறுவனங்களின் தலைமைத் தகவல் அதிகாரிகள் (CIO), AI மூலம் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற அதிக அழுத்தத்தை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்பம் மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்து, நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

மனிதப் பணியாளர்களைக் குறைத்து அவர்களுக்குப் பதிலாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் அதிக லாபம் கிடைக்கும் என்ற கணிப்புகளுக்கும் இந்த ஆய்வு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது மட்டுமே லாபத்திற்கு உத்தரவாதமல்ல; அதைச் சரியாகப் பயன்படுத்துவதும் முக்கியம் என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News