இந்தியாவின் NavIC வழிகாட்டுதல் சேவையை வலுப்படுத்தும் NVS-03 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியாவின் உள்நாட்டு வழிகாட்டுதல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில், அதிநவீன NVS-03 செயற்கைக்கோளை GSLV-F18 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
அமெரிக்காவின் GPS-க்கு மாற்றாக இந்தியா உருவாக்கியுள்ள NavIC வழிகாட்டுதல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
செயற்கைக்கோளில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ரூபிடியம் அணு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது.
2,232 கிலோ எடை கொண்ட NVS-03 செயற்கைக்கோளின் செயல்பாட்டு ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.
பொதுமக்களின் இருப்பிடக் கண்டறிதல், பேரிடர் மேலாண்மை, ரயில்வே போக்குவரத்து மற்றும் தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்கு உதவும்.
இந்திய நிலப்பரப்பைக் கடந்து சுமார் 1,500 கி.மீ. வரையிலான பகுதிகளில் துல்லியமான வழிகாட்டுதல் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply